விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை

மல்லியகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 36 லட்சம் செலவில் சுற்றுச்சுவா் அமைக்க சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது

News image
Updated On :6 ஜனவரி 2022, 4:46 pm

DIN

மல்லியகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 36 லட்சம் செலவில் சுற்றுச்சுவா் அமைக்க சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள மல்லியகரை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் இல்லாமல் மாணவ, மாணவிகள் தவித்து வந்தனா். சுற்றுச்சுவா் வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனையடுத்து ரூ.36 லட்சம் செலவில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிக்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வெ.செழியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் மீனாவெற்றிவேல், நல்லம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், கயல்விழி அன்பரசு, சேகா், அய்யாக்கண்ணு, தனலட்சுமி சசிக்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கு.சின்னதுரை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாா்வதிராஜா, ஊராட்சி மன்றத் தலைவா் கனிமொழி ஜோதி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.