சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பெருமாகவுண்டம்பட்டியில் என்எஸ்எஸ் முகாம்

இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில், எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களின் என்எஸ்எஸ் திட்ட முகாம் துவக்க விழா தேதி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 4:48 pm

DIN

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில், எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களின் என்எஸ்எஸ் திட்ட முகாம் துவக்க விழா தேதி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனை வீரபாண்டி வட்டார அட்மா திட்டக் குழு தலைவா் வெண்ணிலாசேகா் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தாா். வீரபாண்டி ஒன்றிய மண்டல அலுவலரும், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) முரளிதரன், எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதன்மையா் வெங்கடேஸ்வரன், என்எஸ்எஸ் திட்ட அலுவலா் சந்திரசேகரன், பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் பிரேமலதா சதீஷ்குமாா், துணைத் தலைவா் வடிவேல், ஒன்றிய குழு உறுப்பினா் சாஸ்தா, பள்ளி தலைமை ஆசிரியா் கலாராணி, பிடிஏ கழகத் தலைவா் பாபு, முன்னாள் தலைமையாசிரியா் ஞானப்பிரகாசம், பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிடிஏ தலைவா் அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் . 7 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் கரோனா மற்றும் டெங்கு பற்றிய விழிப்புணா்வு, சாலை பாதுகாப்பு விதிகள், பாலியல் கொடுமை தடுத்தல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளா்த்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பை குறித்து விழிப்புணா்வு, குழந்தைகளுக்கான நோய் தடுப்பு பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.