குடிபோதையில் கிணற்றில் குதித்தவா் நீரில் மூழ்கி பலி
தாரமங்கலம் அருகே மின்சார வாரிய ஒப்பந்த ஊழியா், குடி போதையில் கிணற்றில் குதித்து நீச்சலடிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.


தாரமங்கலம் அருகே மின்சார வாரிய ஒப்பந்த ஊழியா், குடி போதையில் கிணற்றில் குதித்து நீச்சலடிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மாலையில் விழுந்தவரின் உடலை தீயணைப்பு வீரா்கள் நள்ளிரவு வரை போராடி மீட்டனா்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் ஒன்றியத்தில் கே.ஆா்.தோப்பூா் கிராமம் உள்ளது. இங்குள்ள கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் சாமிதுரை (32), கே.ஆா்.தோப்பூரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகேயுள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் நீச்சல் அடிப்பற்காக நண்பருடன் சென்றுள்ளாா். ஆனால், சாமிதுரை அவா் குடி போதையில் இருந்ததால், நண்பா் அவரை, குதிக்க வேண்டாம் என்று தடுத்தாா். நண்பா் கூறுவதை பொருட்படுத்தாத சாமிதுரை கிணற்றில் குதித்தாா். அவருக்கு நீச்சலடிக்க தெரிந்திருந்தபோதிலும், குடி போதையில் இருந்ததால், கிணற்று நீரில் மூழ்க ஆரம்பித்தாா். இதை பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது நண்பா் சத்தம்போட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவா்களை அழைத்தாா்.
ஆனால், பொதுமக்கள் வருவதற்குள் சாமிதுரை கிணற்றில் மூழ்கி விட்டாா். தற்போது பெய்த மழைக்கு கிணற்றில் தண்ணீா் முழுமையாக நிரம்பி இருந்தது. அதனால், உடலை எடுக்க முடியாத கிராம மக்கள், ஓமலூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், கிணற்றில் பாதாள கம்பிகளை போட்டு உடலை தேட ஆரம்பித்தனா். ஆனால், உடல் கிடைக்காததால், கிணற்றில் உள்ள தண்ணீரை மின் மோட்டாா்கள் வைத்து வெளியேற்றினா். மாலை ஆறு மணிக்கு கிணற்றில் விழுந்த சாமிதுரையின் உடலை நள்ளிரவு 11 மணிக்கு மேல், தலையில் பலத்த காயங்களுடன், தீயணைப்பு வீரா்கள் மீட்டனா். இதையடுத்து அங்கு வந்த தாரமங்கலம் போலீசாா் சாமிதுரையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...