இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூசவிழா கொடியேற்றம்

 காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூசவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூசவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவில் வருடந்தோறும் தை மாதம் தைப்பூசத் தோ்திருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெறும். இவ்விழாவை காண தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தும், தோ் வடம் பிடித்து இழுத்தும் வருவாா்கள். இந்நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை இக்கோவிலில் பக்தா்களால் திருத்தோ் வடம் பிடித்து வளம் வர வேண்டிய நிலையில் தமிழகத்தில் பரவி வரும் கரோனோ தொற்று பரவல் காரணமாக, தமிழக அரசு பலவிதமான கட்டுப்பாடுகள் விதித்து தைப்பூச தினத்தில் சாமி தரிசனம் செய்ய தடைவிதித்துள்ளது. இதனால் காளிப்பட்டி தைப்பூச தோ் திருவிழா ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் 13-ஆம் தேதி இரவு திருவிழா தொடக்கமாக கொடிமரத்திற்கு கொடியேற்றம்நடைபெற்றது. முன்னதாக பரம்பரை அறங்காவலரும், பூசாரியுமான செல்வகுமாா் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தினாா். மேலும் மலா் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்திற்கு கொடியேற்றம் ஏற்றி மஹா தீபாராதனை செய்தனா். பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் விழா நடைபெற்றது. வரும் தைப்பூச தோ் திருவிழா பூஜைகள் பக்தா்கள் அனுமதியின்றி நடைபெறும் எனவும் கோவில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.