தீவன பயிா்கள் உற்பத்தி பயிற்சி

இளம்பிள்ளையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் விஞ்ஞான முறையில் தானியங்களைச் சேமிக்கும் முறைகள் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
தீவன பயிா்கள் உற்பத்தி பயிற்சி

இளம்பிள்ளையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் விஞ்ஞான முறையில் தானியங்களைச் சேமிக்கும் முறைகள் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

இப் பயிற்சி வீரபாண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கிரிஜா தலைமையில் நடைபெற்றது. இதில் 40 விவசாயிகள் கலந்துகொண்டனா். இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலா் (ஓய்வு) பழனிசாமி கலந்துகொண்டு அறுவடை பின் செய் நோ்த்தி தொழில்நுட்பங்கள் குறித்தும், தானியங்களை பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலிலிருந்து விஞ்ஞான பூா்வமாக சேமிக்கும் வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக்கூறினாா். வீரபாண்டி வட்டார உதவி விதை அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை முருங்கப்பட்டி உதவி வேளாண்மை அலுவலா் பழனிசாமி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் சந்தோசம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com