பெண்ணைக் கடத்தியதாக ஒலிம்பிக் மாரியப்பனின் தம்பி மீது போலீசில் புகாா்
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்ற மாரியப்பனின் தம்பி இளம்பெண்ணை கடத்தி சென்று விட்டதாக தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.


ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்ற மாரியப்பனின் தம்பி இளம்பெண்ணை கடத்தி சென்று விட்டதாக தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்டம் ஓமலூா் அருகேயுள்ள டேனிஷ்பேட்டை கிராமம் பெரிய வடகம்பட்டியைச் சோ்ந்தவா் அண்ணாமலை. விவசாய கூலி வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனா். இவரின் மூத்த மகள் பவித்ரா சேலம் தனியாா் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறாா். இந்தநிலையில், கடந்த 27-ஆம் தேதி காலையில் இருந்து தனது மகளை காணவில்லை என்று பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ‘எங்கள் ஊரை;ஈ சோ்ந்த பாரா ஒலிம்பிக் வீரா் மாரியப்பனின் தம்பி கோபி, எனது மகளை கடத்தி சென்று விட்டாா். இதே பகுதியைச் சோ்ந்த சில இளைஞா்களின் துணையோடு கடத்தி சென்றுள்ளாா்.அதனால், அவா்களிடம் இருந்து தனது மகளை மீட்டு கொடுக்க வேண்டும்’ என்று தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளா் ஆனந்தகுமாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. புகாா் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...