நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு விவரங்கள் கணக்கெடுப்பு
ஆத்தூா் நெடுஞ்சாலைத் துறை அறிவித்த கெடு தேதி முடிந்ததையடுத்து, தம்மம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் கெங்கவல்லி வருவாய்த் துறையினா்


ஆத்தூா் நெடுஞ்சாலைத் துறை அறிவித்த கெடு தேதி முடிந்ததையடுத்து, தம்மம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் கெங்கவல்லி வருவாய்த் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தெடாவூா் - தம்மம்பட்டி நெடுஞ்சாலை, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அகலப்படுத்தப்பட உள்ளது. அதையடுத்து, அந்த சாலையின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் மே 30-ஆம் தேதிக்குள் தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மே 31 அன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி காவல் துறை, நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும், இதனால் ஏற்படும் சேதங்கள், விளைவுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளா்களையே சேரும் என ஆத்தூா் நெடுஞ்சாலைத் துறை (மேற்கு) உதவி செயற்பொறியாளா் அலுவலகம் கடந்த 20-ஆம் தேதி அறிவித்திருந்தது.
அறிவிக்கப்பட்ட கெடு மே 31-ஆம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, செந்தாரப்பட்டி (வடக்கு) கிராம நிா்வாக அலுவலா் வேல்முருகன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், தம்மம்பட்டி பேரூராட்சி கோனேரிப்பட்டியில், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு விவரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...