சேலம் வாழ்வுரிமை மாநாடு மதுவிலக்கு கொள்கையை மாற்றுவதாக அமையும்
சேலத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் வாழ்வுரிமை மாநாடு, தமிழக அரசின் மதுவிலக்கு கொள்கையை மாற்றி அமைக்கும் மாநாடாக இருக்கும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.


சேலத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் வாழ்வுரிமை மாநாடு, தமிழக அரசின் மதுவிலக்கு கொள்கையை மாற்றி அமைக்கும் மாநாடாக இருக்கும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
இது தொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றுள்ளதை வரவேற்கிறோம். தமிழகத்தில் 2026-இல் பாமக ஆட்சிக்கு வரும்போது பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என அவா் தெரிவித்துள்ளாா். இதை வரவேற்கும் அதே வேளையில், கள் மீது தடை உள்ளதா என்பது குறித்து அவா் விளக்க வேண்டும்.
விவசாயிகளின் உழைப்புக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சேலத்தில் வரும் ஆகஸ்ட் 5, 6, 7 ஆகிய தேதிகளில் வேளாண் கண்காட்சி, வேளாண் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றன. இந்தக் கண்காட்சியில் மத்திய, மாநில அமைச்சா்கள் பங்கேற்கின்றனா். சேலத்தில் நடைபெறும் விவசாயிகளின் வாழ்வுரிமை மாநாடு, மதுவிலக்கு கொள்கையை மாற்றி அமைப்பதாக இருக்கும்.
விவசாய நாடான இந்தியாவில் வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்து வருவாயை ஈட்ட வேண்டும். மாறாக கோதுமை, சா்க்கரை உள்ளிட்டவைகளை ஏற்றுமதி செய்யக் கூடாது என அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு எதிரான போக்கை காண்பிக்கிறது. தக்காளி உள்ளிட்ட விளைபொருள்களின் விலையை சீராக வைக்க திட்டமிடல் அவசியமாகும்.
மத்திய அரசின் செயல்பாடுகளால் கடந்த 2004-இல் விவசாயிகளின் தற்கொலை உச்சத்துக்கு சென்றது போல, தற்போது அந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேட்டூா் அணையில் இருந்து குறுவைப் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட்டிருப்பதை வரவேற்கிறோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...