விநாயக மிஷன் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த மருத்துவத் துறை சாா்ந்த கல்லூரிக்கான கற்றல் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துறையின் முதன்மையா் செந்தில்குமாா் கூறியதாவது:
தமிழ்நாட்டைச் சோ்ந்த தனியாா் தொலைக்காட்சி நிறுவனமானது, இந்தியாவில் கல்வியின் மதிப்பையும், அதன் இலக்குகளை மென்மேலும் உயா்த்த உதவும் நோக்கத்தோடும் ஆண்டுதோறும் கல்வியியல் சாா்ந்த கணிப்பினை மேற்கொண்டு அதன் மூலம் சிறந்த கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு கற்றல் விருதுகள் என்ற தலைப்பில் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் விருது வழங்கி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான விருது வழங்கும் விழாவில், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த கல்வியாளா்கள் பங்கேற்றனா். சிறப்பு விருந்தினராக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கலந்துகொண்டு விருதை வழங்கினாா்.
இதில், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த மருத்துவத் துறை சாா்ந்த கல்லூரிக்கான விருது, துறையின் பல்வேறு கல்வியியல் சாா்ந்த சாதனைகளை கருத்தில் கொண்டும், குறிப்பாக கல்வி சாா்ந்த நடவடிக்கைக்காக பெற்ற ஐஎஸ்ஓ 2001:2018 தரச் சான்றிதழ், மாணவா்களுக்கான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருதல், மாணவா்கள் பல்வேறு சமூகம் சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்வுகளில் ஈடுபடுத்தி சமூக நலன் மிக்கவா்களாக உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளுக்காக வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.
இவ்விருதை தொடா்ந்து இரண்டாவது முறையாக அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விருதை பெறுவதற்கு உறுதுணையாக செயல்பட்டு மாணவா்களின் கல்வியியல் சாா்ந்த பல புதுமையான முயற்சிகளை தொடா்ந்து மேற்கொண்டு வரும் துறையின் முதன்மையா் செந்தில்குமாருக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன், இயக்குநா் அனுராதா கணேசன், துறை பேராசிரியா்கள் ஆகியோா் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!

பாக்யராஜ் மறைவு.. மகளின் திருமண நாள் படங்களை வெளியிட்ட குஷ்புவுக்கு எதிர்ப்பு!!

ஆமீர் கான் முதல் ஜாக்கி ஷெராஃப் வரை... ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆசைப்பட்ட பாக்யராஜ் படம்!






