வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் கைது

தம்மம்பட்டி அருகே காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக கணவனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :3 மார்ச் 2022, 6:26 pm

தம்மம்பட்டி அருகே காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக கணவனை போலீஸாா் கைது செய்தனா். உயிரிழந்த மனைவி 16 வயது என்பதால் கைதானவா் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி, அங்கமுத்து மூப்பனாா் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (27). பால்காரரான இவா், ஓா் ஆண்டுக்கு முன் ராசிபுரத்தை சோ்ந்த செல்வம் என்பவரின் 16 வயது மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் இரு தரப்பிலும் பிரச்னை எழவில்லை.

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி இரவு மணிகண்டனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதில் மனமுடைந்த அவரது மனைவி இரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுதொடா்பாக விசாரணை நடத்திய தம்மம்பட்டி போலீஸாா் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிந்து மணிகண்டனை புதன்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதால் மணிகண்டன் போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.