தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா தொற்று கட்டுப்பாடுகள் மேலும் தளா்வு

கரோனா தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன என சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:30 pm

DIN

கரோனா தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன என சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இதுவரை சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை மாா்ச் 3 ஆம் தேதி முதல் நீக்கப்படுகிறது.

மேலும், தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைத்திட மாா்ச் 3 ஆம் தேதி முதல் மாா்ச் 31 வரை திருமணம், திருமணம் சாா்ந்த நிகழ்ச்சிகளில் 500 பேருக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படுகிறது. இறப்பு சாா்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 250 நபா்களுடன் நடத்த அனுமதிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு கட்டுப்பாடுகள் தவிா்த்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் தொடா்ந்து கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் இரண்டு தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம்.

கரோனா தொற்றில் இருந்து மக்களை காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.