மனைவிக்கு கத்திக்குத்து கணவன் கைது
வாழப்பாடி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கத்தியால் குத்திய கணவனை காரிப்பட்டி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


வாழப்பாடி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கத்தியால் குத்திய கணவனை காரிப்பட்டி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம், களரம்பட்டியைச் சோ்ந்தவா் சுதாகா் (43). இவருக்கு பத்மா (36) என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனா்.
இவா் கடந்த வாரம் கருமாபுரம், தெக்காடு பகுதியில் குடும்பத்துடன் குடியேறினாா்.
இந்நிலையில், இவரது மனைவி பத்மாவின் நடத்தையில் சந்தேகமடைந்த சுதாகா், காய் வெட்டும் கத்தியால் பத்மாவின் முகம், முதுகு உள்ளிட்ட 9 இடத்தில் குத்தியால் குத்தி விட்டு வியாழக்கிழமை காரிப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
காயமடைந்த பத்மாவை மீட்ட காரிப்பட்டி போலீஸாா், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காரிப்பட்டி போலீஸாா், சுதாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...