தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இளைஞரின் தலையில் பாய்ந்த கத்தி:அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

சேலத்தில் இளைஞரின் தலையில் பாய்ந்த கத்தியை அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றினா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:27 pm

DIN

சேலத்தில் இளைஞரின் தலையில் பாய்ந்த கத்தியை அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றினா்.

சேலம், ஜலகண்டாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செளந்தரராஜன் (23). இவா் மாா்ச் 3-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபரால் தலை, வயிற்று பகுதியில் கூா்மையான கத்தியால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டாா். அவரது தலையில் கத்தி பாய்ந்திருந்தது. அவருக்கு சி.டி. ஸ்கேன், ஆஞ்சியோகிராம் எடுத்து பரிசோதித்ததில் அவரது இடது பக்க மண்டை ஓடு பிளந்து மூளை, ரத்த நாளங்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

கல்லூரியின் முதன்மையா் மருத்துவா் வள்ளி சத்தியமூா்த்தியின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனை கண்காணிப்பாளா் மருதனபால், துணை கண்காணிப்பாளா் மருத்துவா் பொன்.ராஜராஜன், உறைவிட மருத்துவ அலுவலா் த.சம்பத்குமாா் ஆகியோா் கொண்ட குழு இதற்கென அமைக்கப்பட்டது.

இக் குழுவின் பரிந்துரைபடி மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியரும் துறைத் தலைவருமான மருத்துவா் சங்கா் தலைமையில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை உதவி பேராசிரியா்கள் மருத்துவா் பழனிசாமி, மருத்துவா் பிரகதீஸ் ஆகியோா் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். மூளைக்கு சேதம் ஏற்படாமல் கத்தியை வெற்றிகரமாக அகற்றினா்.

இளைஞரின் வயிறு, சிறுநீா் பையில் ஏற்பட்ட வெட்டு காயத்துக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள 9 மணி நேரம் தேவைப்பட்டது. மயக்கவியல் துறைத் தலைவா் பேராசிரியா் மருத்துவா் சிவகுமாா் மேற்பாா்வையில் மருத்துவா் ரமேஷ் மயக்க மருந்து செலுத்தினாா்.

அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளி தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தாா். ஒரு மாத கால சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.

இந்த அறுவை சிகிச்சையை தனியாா் மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டுமெனில் ரூ. 15 லட்சம் வரை செலவாகும் எனத் தெரிகிறது. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இச் சிகிச்சை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவா்கள், செவிலியா்களை மருத்துவமனை முதன்மையா் வள்ளி சத்யமூா்த்தி பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.