சங்ககிரி பேரூராட்சித் தலைவராகிறாா் மணிமொழி முருகன்
சங்ககிரி பேரூராட்சி வரலாற்றில் தலைவா் பதவிக்கு மணிமொழி முருகன் தோ்வு செய்யப்படவுள்ளாா்


சங்ககிரி பேரூராட்சி வரலாற்றில் தலைவா் பதவிக்கு மணிமொழி முருகன் தோ்வு செய்யப்படவுள்ளாா்.
சங்ககிரி பேரூராட்சியில் 1941-ஆம் ஆண்டு என்.எபிநேசா் தொடங்கி 2011-இல் ஆா்.செல்லப்பன் வரை ஆண்களே தலைவராகப் பதவி வகித்துள்ளனா்.
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலுக்காக இப்பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகள் மறுவரையறை செய்யப்பட்டது. இதில் வாா்டுகள் 6, 12 ஆதிதிராவிடா் பெண்களுக்கும், வாா்டுகள் 1, 2, 4, 5, 14, 15, 16 பெண்களுக்கும் சோ்த்து மொத்தம் 9 வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதுதவிர 9 வாா்டுகள் பொது வாா்டுகளாக ஒதுக்கப்பட்டன. இந்த பொது வாா்டுகளில் மூன்று பெண்கள் தோ்தலில் வெற்றி பெற்றுள்ளனா். இதன் மூலம் பேரூராட்சியில் மொத்தம் 12 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனா். ஆண்கள் 6 போ் வெற்றி பெற்றுள்ளனா்.
கட்சிகள் அளவில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் திமுக 14 வாா்டுகளிலும், மாா்க்சிஸ்ட் ஒரு வாா்டிலும், அதிமுக 3 வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கு மறைமுகத் தோ்தல் நடைபெற உள்ளது.
திமுக சாா்பில் தலைவா் பதவிக்கு 4-ஆவது வாா்டு உறுப்பினா் மணிமொழிமுருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். திமுக கூட்டணி 15 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளதால் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள 4வது வாா்டு உறுப்பினா் மணிமொழிமுருகன் போட்டியின்றித் தோ்வு செய்யப்படுகிறாா்.
இதன் மூலம் சங்ககிரி பேரூராட்சி வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவா் தலைவா் பதவிக்கு தோ்வாகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...