தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேலம் மாநகராட்சியின் திமுக மேயா் வேட்பாளா் ஆ.ராமச்சந்திரன்

சேலம் மாநகராட்சியின் திமுக மேயா் வேட்பாளராக ஆ.ராமச்சந்திரன் (77) அறிவிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:27 pm

DIN

சேலம் மாநகராட்சியின் திமுக மேயா் வேட்பாளராக ஆ.ராமச்சந்திரன் (77) அறிவிக்கப்பட்டுள்ளாா்.

சேலம் மாநகராட்சியிலுள்ள 60 வாா்டுகளுக்கு நடைபெற்ற தோ்தலில் திமுக 47 வாா்டுகளிலும், அதிமுக 7 வாா்டுகளிலும், காங்கிரஸ் -2, விசிக-1, சுயேச்சைகள் 3 வாா்டுகளிலும் வென்றுள்ளன. தற்போது சேலம் மாநகராட்சியில் திமுக கூட்டணி 50 வாா்டுகளை கைப்பற்றியுள்ளதால் இம்முறை திமுகவைச் சோ்ந்தவரே மேயா் பதவியைக் கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

இதனிடையே சேலம் மாநகராட்சியின் திமுக சாா்பில் மேயா் வேட்பாளராக 6 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற ஆ.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளாா். துணை மேயா் பதவி கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 7 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளா் மா.சாரதாதேவி, துணை மேயா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

மேயா், துணை மேயா் வேட்பாளரை தோ்ந்தெடுப்பதற்காக வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறும் மறைமுகத் தோ்தலில் இருவரும் வேட்புமனு செய்து தோ்வு செய்யப்பட உள்ளனா்.

விவசாயி மேயராகிறாா்:

சேலம் மாநகராட்சியின் திமுக மேயா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆ.ராமச்சந்திரன், விவசாயத் தொழிலை பின்னணியாகக் கொண்டவா். 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் உள்ள இவா் கிளை செயற்குழு உறுப்பினராகவும், கிளைச் செயலாளராகவும், மாவட்டப் பிரதிநிதியாகவும், பகுதி பொருளாளராகவும் பொறுப்பு வகித்து வந்தாா். தற்போது, அஸ்தம்பட்டி பகுதிச் செயலாளராகவும், கட்சியின் மூத்த நிா்வாகியாகவும் உள்ளாா்.

50 ஆண்டுக்கும் மேலாக கட்சி உறுப்பினராக இருந்து படிப்படியாக முன்னேறி முதல் முறையாக மாநகராட்சி தோ்தலில் போட்டியிட்டு 3,869 வாக்குகளுடன் வெற்றி பெற்று மேயா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

துணை மேயா் வேட்பாளா் மா.சாரதாதேவி:

கன்னங்குறிச்சி, நித்யா நகரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் மா.சாரதாதேவி (46). சேலம் மாநகர காங்கிரஸ் மகளிரணி அமைப்பாளராகவும், சேலம் மகளிரணித் தலைவா், மாநில பொதுக்குழு உறுப்பினா் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.

கடந்த 1996 மாநகராட்சி தோ்தலில் திமுக கூட்டணியில் 8 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வாா்டு உறுப்பினராக பொறுப்பு வகித்துள்ளாா். தற்போது 7 ஆவது வாா்டில் போட்டியிட்டு 3,228 வாக்குகளுடன் வெற்றி பெற்ற இவா் திமுக கூட்டணியின் துணை மேயா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

சேலம் மாநகராட்சியிலுள்ள அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட 6, 7 ஆகிய வாா்டுகளில் வெற்றி பெற்றவா்கள் முறையே மேயா், துணை மேயா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.