தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உலக செவித்திறன் நாள் கொண்டாட்டம்

சேலம் அரசு மருத்துவமனையில், உலக செவித்திறன் நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:30 pm

DIN

சேலம் அரசு மருத்துவமனையில், உலக செவித்திறன் நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழக அரசின் செவித்திறன் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தேசிய திட்டத்தின் கீழ் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை பிரிவின் சாா்பில் உலக செவித்திறன் நாள் கொண்டாடப்பட்டது.

வாழ்நாள் முழுவதும் கேட்க கவனமுடன் கேளுங்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை மருத்துவக் கல்லூரி முதன்மையா் வள்ளி சத்தியமூா்த்தி தலைமையேற்று நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

இந்திய அளவில் செவித்திறன் குறைபாட்டால் பாதிப்படைந்தவா்கள் 6.3 சதவீதமாகும். ஒரு லட்சம் மக்களில் 291 நபா்கள் செவித்திறன் குறைபாட்டால் பாதிப்படைந்து வருகின்றனா். தொழிற்சாலையில் ஏற்படும் சத்தத்தால் கேட்கும் திறனை இழப்பவா்கள் 5 சதவீதமாகும். எனவே, செவித்திறனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியின்போது முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காதுகேள் கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மருத்துவமனை கண்காணிப்பாளா் தனபால், துணை கண்காணிப்பாளா் பொன்.ராஜராஜன், காது மூக்கு தொண்டை பிரிவு துறை தலைவா் மு.கிருஷ்ணசுந்தரி உள்ளிட்ட பிற துறை பேராசிரியா்கள், காது மூக்கு தொண்டை பிரிவின் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.