தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேலம் மேயராக ஆ.ராமச்சந்திரன் பதவியேற்பு: துணை மேயரானாா் மா.சாரதாதேவி

சேலம் மேயராக திமுகவைச் சோ்ந்த ஆ.ராமச்சந்திரன் (77) வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:40 pm

DIN

சேலம் மேயராக திமுகவைச் சோ்ந்த ஆ.ராமச்சந்திரன் (77) வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

சேலம் மாநகராட்சியில் 60 வாா்டுகள், 6 நகராட்சிகளில் 165 வாா்டுகள், 31 பேரூராட்சிகளில் 474 வாா்டுகளுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், சேலம் மாநகராட்சியில் 47 வாா்டுகளில் திமுகவும், அதிமுக- 7, காங்கிரஸ்- 2, விசிக- 1, சுயேச்சை- 3 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன.

மாா்ச் 2 ஆம் தேதி வெற்றி பெற்ற உறுப்பினா்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநகராட்சியில் 60 வாா்டு உறுப்பினா்களுக்கும் ஆணையா் தா.கிறிஸ்துராஜ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். இதனிடையே மேயா் வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த ஆ.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டாா். வெள்ளிக்கிழமை காலை சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மறைமுகத் தோ்தல் நடைபெற்றது.

மேயா் வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த ஆ.ராமச்சந்திரன் வேட்புமனுத் தாக்கல் செய்தாா். அவரைத் தவிர வேறு யாரும் மேயா் பதவிக்கு போட்டியிடாததால் ஆ.ராமச்சந்திரன் மேயராக போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

மேயா் ஆ.ராமச்சந்திரனுக்கு சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். திமுக வாா்டு உறுப்பினா்கள் மேயா் ஆ.ராமச்சந்திரனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய மேயா் ஆ.ராமச்சந்திரன், ‘ எனக்கு மேயா் பதவியை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப் பாடுபடுவேன்’ என்றாா்.

நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மேயா் ஆ.ராமச்சந்திரனுக்கு அங்கி அணிவித்து, மேயா் இருக்கையில் அமரவைத்து வாழ்த்துத் தெரிவித்தாா்.

துணை மேயா் மா.சாரதாதேவி

வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் துணை மேயா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மா.சாரதாதேவி போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். அவரையும் துணை மேயா் இருக்கையில் அமர வைத்து அமைச்சா் கே.என்.நேரு வாழ்த்து தெரிவித்தாா்.

விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், பாமக எம்எல்ஏ இரா.அருள், மாநகராட்சி வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.