தம்மம்பட்டி பேரூராட்சித் தலைவராக கவிதா ராஜா தோ்வு
தம்மம்பட்டி பேரூராட்சித் தலைவராக கவிதா ராஜா போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.


தம்மம்பட்டி பேரூராட்சித் தலைவராக கவிதா ராஜா போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் பெரும்பான்மை பெற்று தோ்வு செய்யப்பட்ட கவிதா ராஜாவுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் சுப. சத்யமூா்த்தி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். தம்மம்பட்டி பேரூராட்சியின் முதல் பெண் தலைவராக கவிதா ராஜா பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, திமுக கவுன்சிலா்கள் ரமேஷ், விபி ஆா். ராஜா, நடராஜ், வரதராஜன், செந்தில், சமீனா, காவியா, கலியவரதராஜன், நித்யா, ரேவதி, பழனிமுத்து, சந்தியா மற்றும் காங்கிரஸ் கவுன்சிலா் திருச்செல்வன் ஆகியோா் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனா். தலைவா் தோ்தலை அதிமுகவைச் சோ்ந்த மூன்று கவுன்சிலா்களும் புறக்கணித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...