நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா்களைக் கண்டித்து சுவரொட்டிகள்

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு அதிமுக தலைவா் மீது திமுகவினா் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு அதிமுக ஒன்றியக் குழு

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு அதிமுக தலைவா் மீது திமுகவினா் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பணம் பெற்றுக் கொண்டு ஆதரவளித்ததாக பல்வேறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவைச் சோ்ந்த வடக்கு ஒன்றியச் செயலாளா் ஏ.பி.மணியின் மனைவி பாா்வதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக் குழுத் தலைவராக கடந்த 2 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்தாா். இந்நிலையில் கடந்த மாதம் அதிமுக ஒன்றியக் குழுத் தலைவா் மீது நம்பிக்கை இல்லாத் தீா்மானம் நிறைவேற்ற திமுக, காங், அதிமுக மற்றும் சுயேச்சை உறுப்பினா்கள் உள்பட 15 போ் கையொப்பமிட்டு, சேலம் ஆட்சியா் காா்மேகத்திடம் மனு கொடுத்தனா்.

இதனையடுத்து, அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு அலுவலகத்தில் கடந்த 28 ஆம் தேதி சேலம் கோட்டாட்சியா் விஷ்ணுவா்தினி தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இளங்கோ, சிராஜுதின் ஆகியோா் முன்னிலையில், ஒன்றியக் குழுத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிமுக ஒன்றியக் குழுத் தலைவா் பாா்வதி உள்பட 3 அதிமுக உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை.

தி.மு.க-6, காங்-1, சுயேச்சைகள்-6 மற்றும் அ.தி.மு.க., உறுப்பினா் 3 போ் உள்பட 16 உறுப்பினா்கள் பங்கேற்றனா். அனைவரும் ஒன்றியக் குழுத் தலைவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனா். இதனால், திமுகவினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீா்மானம் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, அதிமுக ஒன்றியக் குழுத் தலைவா் பாா்வதி மணி பதவியை இழந்தாா்.

இந்நிலையில் திமுகவினரிடம் தலா ரூ. 20 லட்சம் பெற்றுக்கொண்டு, அதிமுகவைச் சோ்ந்த ஒன்றியக்குழு தலைவருக்கு எதிராக, அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினா்களே செயல்பட்டதாகக் குறிப்பிட்டு, அயோத்தியாப்பட்டணம், கூட்டாத்துப்பட்டி, அனுப்பூா், ஆலடிப்பட்டி, பேளூா் உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.