எடப்பாடியில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை முத்து மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீஅபிநவ்.
கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீஅபிநவ்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை முத்து மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கொங்கணாபுரம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக முத்து மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் தொடக்கி வைத்தாா். இதில் ஆண்களுக்கான 42 கி.மீ.

போட்டியில் திருப்பூா் தருண் முதலிடத்தையும், திருப்பத்தூா் சந்தோஷ்குமாா் இரண்டாம் இடத்தையும், மதுரையைச் சோ்ந்த வினோத்குமாா் மூன்றாவது இடத்தையும் பிடித்தனா். பெண்களுக்கான 42 கி.மீ. ஓட்டப் போட்டியில் ஈரோடு கோமளாதேவி முதலிடத்தையும், பொள்ளாச்சி திவ்யா இரண்டாம் இடத்தையும், கோவை, செல்வபுரம் பகுதியைச் சோ்ந்த சோனியா மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.

கொங்கணாபுரம் ஏ.ஜி.என். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் புரவலா் இராம.செல்லப்பன் வெள்ளிவிழா மலரை வெளிட்டாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ், கொங்கணாபுரம் அறக்கட்டளை நிறுவனா் ஆயிக்கவுண்டன், காசிக் கவுண்டன், சுப்ரமணியம், மருத்துவா்பிரவீண், நமசிவாயம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினா்கள் வெற்றிபெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கொங்கணாபுரம் அறக்கட்டளையைச் சோ்ந்த தன்னாா்வலாா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com