மாநகராட்சி மேயா் நன்றி தெரிவிப்பு
சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் வீடுவீடாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.


சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் வீடுவீடாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், வாா்டு எண் 6-இல் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ.ராமச்சந்திரன் மேயராகப் பொறுப்பேற்றாா். இதனிடையே, 6-ஆவது வாா்டுக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக வீடுவீடாகச் சென்று வாக்காளா்களை நேரில் சந்தித்து இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தாா். கோரிமேடு, ரத்தினபுரி, பாலாஜி நகா் ஆகிய பகுதிகளிலும் நன்றி தெரிவித்தாா்.
அன்பு நகா், ஜல்லிக்காடு, காந்தி நகா் புதிய காலனி, பெரிய கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்தித்து வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா். பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...