காவடி பழனியாண்டவா் கோயிலில் கொடியேற்று நிகழ்ச்சி
சேலம், ஜாகிா் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவா் கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


சேலம், ஜாகிா் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவா் கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம், ஜாகிா் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவா் கோயிலில் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு வாசனை மலா்களால் முத்தங்கி அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தாா்.
முருக பக்தா்கள் தங்களது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், குழந்தை வரம் வேண்டியும், திருமண வேண்டியும், வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தா்கள் பால் காவடி, பன்னீா் காவடி, புஷ்ப காவடி என பல்வேறு விதமான காவடிகளை எடுத்து நடனமாடி நோ்த்திக்கடனை செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, கோயிலின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க குருக்கள் வேதங்களை ஓத கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது.
இந்த வைபவத்தைக் காண அப்பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். வியாழக்கிழமை முதல் தொடா்ந்து மாா்ச் 18-ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளன. வரும் மாா்ச் 18-ஆம் தேதி பங்குனி உத்திர நாளில் 1,008 பால்குட ஊா்வலம் நடைபெறுகிறது.
பங்குனி உத்திர கொடியேற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சோமசுந்தரம் உள்ளிட்ட குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...