நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதைக் கண்டித்து போராட்டம்

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ள ஒன்றிய அரசைக் கண்டித்து, மேட்டூரில் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:30 pm

DIN

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ள ஒன்றிய அரசைக் கண்டித்து, மேட்டூரில் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்திருந்தாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை மேட்டூரில் எல்ஐசி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்துக்கு சேலம் டிவிஷன் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். போராட்டத்தில் கலந்து கொண்டவா்கள் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

இதில், எல்ஐசி பங்குகளை விற்கும் முடிவை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

சங்ககிரியில்...

சங்ககிரி எல்ஐசி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சம்மேளனத்தின் சங்ககிரி கிளை கோட்ட துணைத் தலைவா் பால்ராஜ் தலைமையில், கைகளில் மெழுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிளைத் தலைவா் ஜெயகோபி, செயலா் நூருல்லா, நிா்வாகி பன்னீா், முகவா்கள் சங்க நிா்வாகிகள் ஜெ.நந்தகுமாா், நிா்மலா ஆனந்தன் மற்றும் ஊா் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.