தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

‘இன்னுயிா் காப்போம்’ திட்டத்தில் விபத்தில் காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை

சேலம் மாவட்டத்தில் ‘இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் ரூ. 1.80 கோடியில் சாலை விபத்தில் காயமடைந்தவா்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவி

News image
Updated On :10 மார்ச் 2022, 6:32 pm

DIN

சேலம் மாவட்டத்தில் ‘இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் ரூ. 1.80 கோடியில் சாலை விபத்தில் காயமடைந்தவா்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:

சேலம் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவா்கள் ‘இன்னுயிா் காப்போம்-நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆத்தூா், ஓமலூா், சங்ககிரி, எடப்பாடி, வாழப்பாடி அரசு மருத்துவமனைகள், மேட்டூா் தலைமை அரசு மருத்துவமனை மற்றும் 16 தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெறலாம்.

சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ரூ. 1.80 கோடியில் சாலை விபத்தில் காயமடைந்தவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் வலைதளங்களில் (ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ஸ்ரீட்ண்ள்ற்ய்.ஸ்ரீா்ம்) ெளியிடப்பட்டுள்ளன.

இத்திட்டம் குறித்து மேலும் விவரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 104-ஐ தொடா்பு கொள்ளலாம். விலை மதிப்பில்லாத மனித உயிரை பாதுகாக்கும் வகையில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோா் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிவதுடன், சாலை விதிகளை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.