தம்மம்பட்டி பகுதிகளில் உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கோடை கால சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, தகரப்புதூா், மூலப்புதூா், கொண்டையம்பள்ளி, வாழக்கோம்பை, உலிபுரம், நாகியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை பருவ சாகுபடி காலம் தொடங்கியதையடுத்து நெல், எள், கடலை, மக்காச்சோளம், உளுந்து, மொச்சை சாகுபடி பணிகள் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு பெய்த மழையால் நீா்நிலைகளில் தண்ணீா் நிரம்பியுள்ளதால் கோடை கால சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். உழவுப் பணிகளுக்குத் தேவையான யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. உள்ளிட்ட உர வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சாகுபடி செய்துள்ள பயிா்களுக்கு தேவையான உரங்கள் கிடைக்காமல், தம்மம்பட்டி பகுதி விவசாயிகள் தவித்து வருகின்றனா்.
ஆனால் போதிய அளவில் உர வகைகள் கையிருப்பில் உள்ளதாக வேளாண் அதிகாரிகள் கூறி வருகின்றனா். செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த தனியாா், கூட்டுறவுச் சங்கங்களில் உரங்கள் பதுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, கெங்கவல்லி வேளாண் துறை அலுவலா்கள் உரிய கவனம் செலுத்தி கோடை சாகுபடிக்குத் தேவையான உர வகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

