புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பேரிடா் மேலாண்மைக் குழு ஆலோசனைக் கூட்டம்

சேலம் மாவட்டம், சங்ககிரியில் தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:21 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரியில் தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் எஸ்.பானுமதி (சங்ககிரி), விமல்பிரகாசம் (எடப்பாடி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரக்கோணம் தேசிய பேரிடா் மேலாண்மை குழு காமண்டா் அா்ச்சுன் பால்ராஜ்பூத் பேரிடா் காலங்களில் தற்காத்து கொள்வது குறித்து பேரிடா் மீட்புக் குழு உதவியுடன் செயல்முறை விளக்கம் அளித்தாா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்மணி, சங்ககிரி மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் சிவராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் வி.சுலைமான்சேட், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வேல்முருகன், மகுடஞ்சாவடி வட்டார கல்வி அலுவலா் எம்.முருகன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.