சேலம்: +2 பொதுத் தேர்வெழுதாத 5% மாணவர்கள்: மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி

சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற +2 பொதுத் தேர்வில் 5 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்: +2 பொதுத் தேர்வெழுதாத  5% மாணவர்கள்: மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி
Updated on
1 min read

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற +2 பொதுத் தேர்வில் 5 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விசாரணை செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.

பிளஸ் டூ பொதுத் தேர்தல் நேற்று தொடங்கியது. இதில் சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 5 சதவீத மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

குறிப்பாக முதலில் மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு குடும்ப சூழல், உடல்நிலை பாதிப்பு, தேர்வு எழுத பயம் அல்லது குழந்தை திருமணம் போன்ற காரனங்கள் குறித்து கண்டறிய அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர்கள் அளித்த பேட்டியில், சேலம் மாவட்டத்தில் புதுச்சேரி 95 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதி இருந்த நிலையில், 5 சதவீத மாணவர்கள் தேர்வுக்கு வராது கண்டறியப்பட்டு உள்ளது என்றும் அதற்கான காரணங்களை அறிய அனைவருக்கும் கல்வி திட்டம், குழந்தைகள் நல குழுமம், இல்லம் தேடி கல்வி திட்டம், ஒருங்கிணைந்த கல்வி அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்களை கொண்டு வீடு வீடாகச் சென்று விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியுள்ளார்.

இந்தக் குழு உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட தேர்வுக்கு வராத மாணவர்கள் மீண்டும் அவர்களை தேர்வு எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com