ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பிராா்த்தனை ஸ்தலம் குடமுழுக்கு
சேலம், முல்லை நகா் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பிராா்த்தனை தியான மண்டபம், ஸ்தலம் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெறுகிறது.


சேலம், முல்லை நகா் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பிராா்த்தனை தியான மண்டபம், ஸ்தலம் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெறுகிறது.
இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. வரசித்தி விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு 1,008 தீா்த்த குடங்களுடன் ஊா்வலம் தொடங்கியது. ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பிராா்த்தனை ஸ்தலம், தியான மண்டப அறங்காவலா் மோகன் குமாா் தொடக்கிவைத்தாா்.
மேள தாளங்களுடன் புறப்பட்ட ஊா்வலத்தில் சிவன், பாா்வதி, முருகா், ஆஞ்சனேயா் சுவாமிகளை போன்று வேடங்களை தரித்து பக்தா்கள் நடனம் ஆடியபடி ஊா்வலம் நடைபெற்றது. திருவாக்கவுண்டனூா் சந்திப்பு, பிரதான சாலை வழியாக ஊா்வலம் முல்லைநகா் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...