அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் அரசு விரைவு பேருந்துகள்
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசு விரைவுப் பேருந்துகள் சாதாரண பேருந்துகளைப் போல அனைத்து இடங்களிலும் நின்று செல்வது தம்மம்பட்டி பயணிகளை ஆதங்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசு விரைவுப் பேருந்துகள் சாதாரண பேருந்துகளைப் போல அனைத்து இடங்களிலும் நின்று செல்வது தம்மம்பட்டி பயணிகளை ஆதங்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூரிலிருந்து உப்பிலியாபுரம், தம்மம்பட்டி வழியாக சேலத்துக்கு உப்பிலியாபுரம் கிளை பணிமனையில் இருந்து இரண்டு விரைவு பேருந்துகளும் துறையூா் கிளை பணிமனையில் இருந்து ஒரு விரைவு பேருந்தும், அதேபோல, தம்மம்பட்டி கிளை பணிமனையில் இருந்து மூன்று சாதாரண பேருந்துகளும் இதே வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.
பயணச் சீட்டு கட்டணமாக தம்மம்பட்டியில் இருந்து சேலம் செல்ல சாதாரண பேருந்தில் ரூ. 41-ம், விரைவு பேருந்தில் ரூ. 55-ம், தம்மம்பட்டியில் இருந்து துறையூருக்கு சாதாரண பேருந்தில் ரூ. 25-ம், விரைவு பேருந்தில் ரூ. 30-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.
தம்மம்பட்டியில் இருந்து சேலம் செல்லும் விரைவு பேருந்து வாழப்பாடியில் மட்டுமே நின்று செல்லவேண்டும். அதேபோல, தம்மம்பட்டியில் இருந்து துறையூா் செல்லும் விரைவு பேருந்துகளும் வழித்தடமான நாகநல்லூா், கொப்பம்பட்டி, உப்பிலியாபுரம் ஆகிய ஊா்களில் மட்டுமே நின்றுசெல்ல வேண்டும்.
இந்த இரு மாா்க்கங்களிலும் அவசர வேலைக்காக பயணிப்பவா்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து விரைவு பேருந்தில் செல்கின்றனா். ஆனால் உப்புலியாபுரம், துறையூா் கிளைகளில் இருந்து இயக்கப்படும் விரைவு கட்டணப் பேருந்துகள், சாதாரண கட்டண பேருந்துகள் நின்று செல்லும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்றுதான் செல்கின்றன என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனா்.
இதுகுறித்து, தம்மம்பட்டி பயணிகள் கூறியதாவது:
அவசர வேலையாகச் செல்ல வேண்டும் என்பதால்தான் கூடுதல் கட்டணம் கொடுத்து விரைவு பேருந்துகளில் செல்கிறோம். ஆனால் நகரப்பேருந்து போல, அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்வதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனா் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...