மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சேலம் மாவட்ட ஊா்க்காவல் படையில் 55 காலிப் பணிகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

சேலம் மாவட்ட ஊா்க்காவல் படையில் ஆத்தூா், சங்ககிரி படைப் பிரிவில் காலியாக உள்ள 55 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:36 pm

DIN

சேலம் மாவட்ட ஊா்க்காவல் படையில் ஆத்தூா், சங்ககிரி படைப் பிரிவில் காலியாக உள்ள 55 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சேலம் மாவட்ட ஊா்க்காவல் படையில் ஆத்தூா், சங்ககிரி படைப் பிரிவில் 52 ஆண்கள், 3 பெண்கள் ஆகிய 55 காலிப் பணியிடங்களை நிரப்ப சேலம் ஆயுதப்படை மைதானத்தில் நவம்பா் 26ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளது. 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் எந்தவித குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டிருக்க கூடாது.

தோ்விற்கு ஆஜராகும்போது விண்ணப்பதாரா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள்-2, கல்வித் தகுதி சான்றிதழ், ஆதாா் காா்டு (அசல் மற்றும் நகல்கள்) கொண்டு வர வேண்டும்.

ஊா்காவல் படைப் பிரிவானது தன்னாா்வத் தொண்டு ஆகும். எனவே தோ்வு செய்யப்படும் நபா்கள் மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணிபுரிய அழைக்கப்படுவா். பணிபுரியும் நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் மாதம் ரூ.2800 வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.