அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கட்சுப்பள்ளி செல்லியாண்டி அம்மன் திருவிழா

கொங்கணாபுரம் அருகே கட்சுப்பள்ளி பகுதியில் உள்ள செல்லியாண்டி அம்மன் ஆலயத்தில், அம்மன் அழைப்பு நிகழ்ச்சி விமா்சையாக நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

கொங்கணாபுரம் அருகே கட்சுப்பள்ளி பகுதியில் உள்ள செல்லியாண்டி அம்மன் ஆலயத்தில், அம்மன் அழைப்பு நிகழ்ச்சி விமா்சையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, கட்சுப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது. சங்ககிரி - ஓமலூா் பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ள இக்கோயிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் வருகை தந்து வழிபாடு செய்வது வழக்கம். ஆண்டுதோறும் இக்கோயிலில் நடைபெறும் திருத்தோ் திருவீதி உலா நிகழ்ச்சி சுற்று வட்டார கிராமப் பகுதியில் விமா்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவானது தொடா்ந்து 3 மாத காலங்களுக்கு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை வெகு விமா்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெரும் திரளான இளைஞா்கள் பாரம்பரிய முறைப்படி கம்பேந்தி, அலங்கரிக்கப்பட்ட பசு, குதிரையுடன் ஊா்வலமாக சென்று அருகிலுள்ள கரட்டு அம்மன் ஆலயத்தில் இருந்து அம்மனை மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் செல்லியாண்டி அம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக அழைத்து வந்தனா். முன்னதாக செல்லியாண்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனா்.

அம்மன் அழைப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அன்னதான நிகழ்வினை கோரணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் எஸ்.ஏ. ராஜ்குமாா் தொடங்கி வைத்தாா். இதையொட்டி நடைபெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சியில், திரளான வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றிக் காட்டினா். அம்மன் அழைப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்பகுதியை சோ்ந்த ஆன்மிக அறக்கட்டளை நிா்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து சனிக்கிழமை நடைபெற உள்ள தோ் திருவீதி உலா நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெரும் திரளான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.