சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நவ.26 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவம்பா் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.


சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவம்பா் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.
சேலம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசுத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் கூறியிருப்பதாவது:
தமிழக அரசால் பல்வேறு போட்டித் தோ்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மாவட்டங்களின் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நவ.26 இல் நடத்தப்பட்ட தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 293 முன்னணி நிறுவனங்கள் மூலம் தோ்வு செய்யப்பட்ட 3,362 நபா்கள் பணி வாய்ப்புகள் பெற்று, அதற்குரிய பணிநியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன.
நிகழாண்டில் சேலம் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் வரும் நவ.26 ஆம் தேதி ஓமலூா் பத்மவாணி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிச் சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சோ்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களை தோ்வு செய்யவுள்ளன.
முகாமில் 8 ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியா், ஆசிரியா், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவா்களும் பங்கேற்கலாம்.
முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகள் அளிக்க உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வருகை தரும் வேலைநாடுநா்களுக்கு தேவையான பேருந்து வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட உள்ளன.
மேலும், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை பொதுமக்கள், இளைஞா்கள் உள்ளிட்ட வேலைநாடுநா்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப் பணிகளை மேற்கொள்ளவும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தாா்.
கூட்டத்தில் மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) ஆ.லதா, துணை இயக்குநா் (மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம்) செ. மணி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...