சேலத்தில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்
சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெறும் சிறப்பு முகாமில் 65,000 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெறும் சிறப்பு முகாமில் 65,000 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட 29,18,099 பேருக்கு முதல் தவணையும் 26,76,707 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 96 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 88 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
35 ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
இம் மாவட்டத்தில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து 42,580 டோஸ்களும், கோவேக்ஸின் 17,640 டோஸ்களும், கோா்பிவாக்ஸ் 7,760 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன.
இந்த முகாமில் 65,000 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 1,18,285 போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும் தகுதியுள்ள 2,88,204 போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும், தகுதியுள்ள 16,78,885 போ் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனா்.
இரண்டாம் தவணை, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே நோய் எதிா்பாற்றல் முழுமையாக உருவாகும். எனவே 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி செல்லும் மற்றும் பள்ளி செல்லா அனைத்து குழந்தைகளும் உரிய முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு தங்களை கரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பான் அட்டை போன்ற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் எடுத்து வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...