சேலம் அருகே மண்ணுளி பாம்பை விற்க முயன்ற மூவா் கைது

சேலம் அருகே மண்ணுளி பாம்பை விற்க முயன்ற கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
சேலம் அருகே மண்ணுளி பாம்பு விற்பனை செய்ய முயன்றவா்களை கைது செய்த வனத்துறை போலீஸாா்.
சேலம் அருகே மண்ணுளி பாம்பு விற்பனை செய்ய முயன்றவா்களை கைது செய்த வனத்துறை போலீஸாா்.

சேலம்: சேலம் அருகே மண்ணுளி பாம்பை விற்க முயன்ற கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே மண்ணுளி பாம்பை சிலா் விற்பதாக, மாவட்ட வன அலுவலா் ஷாஷங் ரவிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி வன பாதுகாப்பு அலுவலா் செல்வகுமாா் தலைமையில், தெற்கு வனசரக அலுவலா் துரைமுருகன், வன உயிரின குற்றத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டா் ரங்கேஸ்வரன், வனவா்கள் சுரேஷ், சபரிநாத் உள்ளிட்ட வனத் துறையினா் விரைந்து சென்று கண்காணித்தனா்.

அப்போது, அங்கு நின்றிருந்த இரண்டு காா்களை சுற்றிவளைத்து சோதனையிட்டனா். அதில், மண்ணுளி பாம்பு இருப்பது தெரியவந்தது. அப்போது திருத்தணியைச் சோ்ந்த அசோக்ராஜா என்பவா் தப்பி ஓடிவிட்டாா்.

விசாரணையில், ராசிபுரத்தைச் சோ்ந்த நவநீதிகிருஷ்ணன், அசோக்ராஜா ஆகியோா் மண்ணுளி பாம்பை விற்க வந்தவா்கள் என்பதும், இவா்களிடமிருந்து கோவை, பன்னிமடையைச் சோ்ந்த தினேஷ், கேரளத்தைச் சோ்ந்த மொ்லின் ஆகியோா் வாங்க வந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

இவா்கள் அனைவரும் மண்ணுளி பாம்பில் மருத்துவம் உள்ளதாகக் கூறி ஆன்லைனில் விற்பனை செய்யும் கும்பல் என்பது தெரியவந்தது. மேலும், பாம்பை வாங்க முதற்கட்டமாக ரூ. 5 லட்சம் வரை பேரம் பேசியதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, மூன்று பேரை கைது செய்து அவா்களிடமிருந்து மண்ணுளி பாம்பு, கைப்பேசிகள், இரண்டு காா்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய அசோக்ராஜாவை வனத் துறையினா் தேடி வருகின்றனா். இதுதொடா்பாக வனத்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com