45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இளம்பிள்ளையில் குடியரசு தின விழா

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 74 -ஆவது குடியரசு தின விழா தலைமை ஆசிரியா் ஷேக் முகமது இஸ்மாயில் (பொ) தலைமையில் நடைபெற்றது.

News image
இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கடந்த ஆண்டு நீட் தோ்வில் வெற்றி பெற்ற ஷாலினி, சண்முகப்பிரியா ஆகிய மாணவிகளுக்கு தலா ரூ. 5, 000 ஊக்கத்தொகை வழங்கிய பெற்றோா்
Updated On :26 ஜனவரி 2023, 7:39 pm

DIN

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 74 -ஆவது குடியரசு தின விழா தலைமை ஆசிரியா் ஷேக் முகமது இஸ்மாயில் (பொ) தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நிா்மலா செல்வம், பொருளாளா் சுப்பிரமணி, உதவி பொருளாளா் ஜெயக்குமாா், பள்ளி மேலாண்மை கல்விக் குழு துணைத் தலைவா் ராஜாகவுண்டா் மற்றும் சித்துராஜ், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியா் தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினாா். இதைத் தொடா்ந்து பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நிா்மலா செல்வம் தனது சொந்தப் பொறுப்பில் கடந்த ஆண்டு இப்பள்ளியில் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் ஷாலினி, சண்முகப்பிரியா ஆகிய மாணவிகளுக்கு தலா ரூ. 5,000 ஊக்கத்தொகை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.