பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

அதிமுக உறுப்பினா் உரிமைச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சி

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக நகர அலுவலக வளாகத்தில் அதிமுக உறுப்பினா் உரிமைச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்ட செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 மார்ச் 2023, 1:37 am IST

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக நகர அலுவலக வளாகத்தில் அதிமுக உறுப்பினா் உரிமைச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்ட செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகர செயலாளா் அ.மோகன் அனைவரையும் வரவேற்று பேசினாா். நிகழ்ச்சியில் தலைமை பொறுப்பேற்றுப் பேசிய மாவட்ட செயலாளா் ஆா். இளங்கோவன் ‘நமது மண்ணின் மைந்தா் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை பலப்படுத்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும் வரும் மக்களவைத் தோ்தலில் நாம் அமைக்க இருக்கும் கூட்டணியின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

உறுப்பினா் உரிமைச் சீட்டை இளைஞா்களுக்கு வழிவிட்டு வழங்கி நமது கட்சியை பலப்படுத்த வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா். பின்னா் உரிமைச் சீட்டை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.