பிஃபா உலகக் கோப்பைத் தொடரில் ஸ்வீடனை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறும் பிஃபா உலகக் கோப்பைத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் அணிகள் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் ஆகிய அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே கோல் கணக்கை தொடங்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர். 45-வது நிமிடத்தில் பிரான்ஸின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே, ஒஸ்மேன் டெம்பெலெவின் உதவியுடன் கோல் அடித்து அணிக்கு முன்னிலையைத் தேடித்தந்தார். இதனால், பிரான்ஸ் அணி முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து இரண்டாவது பாதியில், மைக்கேல் ஒலிஸ் அசிஸ்ட் செய்ய பிராட்லி பார்கோலா கோல் அடிக்க பிரான்ஸ் அணி 2-0 கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 74-ஆவது நிமிடத்தில் மைக்கல் ஒலிஸ் அசிஸ்ட்-ஐ எம்பாப்பே கோலாக மாற்றினார். இதனால், பிரான்ஸ் 3-0 என வலுவான நிலையைப் பெற்று வெற்றி பெற்றது. ஆட்டம் முடியும் வரை ஸ்வீடன் அணியால் ஆறுதல் கோல்கூட போட முடியவில்லை.
இதுவரை கனடா, பிரேசில், பராகுவே, மொராக்கோ, நார்வே ஆகிய நாடுகளுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு பிரான்ஸ் அணியும் முன்னேறியுள்ளது.
Summary
France uncorked a Champagne performance on Tuesday (June 30, 2026) to sweep Sweden aside 3-0 with a display of attacking verve and precision and book their place in the World Cup last 16. The scoreline flattered Sweden.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கனடாவை எதிர்கொள்ளும் மொராக்கோ: பிரேசிலுக்கு யார்?

முதல் முறையாக... டிராவில் முடிந்த ஜப்பான் - ஸ்வீடன் போட்டி!
ஆா்ஜென்டீனா, பிரான்ஸ் முன்னேற்றம்! மெஸ்ஸி புதிய சாதனை

100-வது போட்டியில் 2 கோல்கள் அடித்த எம்பாப்பே! இராக்கை வீழ்த்திய பிரான்ஸ்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


