அரசிராமணி கிராமத்தில் உள்ள சோழீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி மூலவருக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
அரசிராமணி கிராமத்தில் உள்ள சோழீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி மூலவருக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

பிரதோஷ வழிபாடு

சங்ககிரி: அரசிராமணி கிராமத்தில் உள்ள பெரிய நாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயில், சங்ககிரியை அடுத்த பூத்தாலகுட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் சுவாமிகள், நந்தி பகவானுக்கும் இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூத்தாலகுட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா், உற்சவ மூா்த்தி, நந்தி பகவானுக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தம்மம்பட்டி...

தம்மம்பட்டி, ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி, சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வீரகனூா், ஸ்ரீ கங்கா செளந்தரேஸ்வரா் கோயிலிலும், கெங்கவல்லி கைலாசநாதா் கோயிலிலும், செந்தாரப்பட்டி ஸ்ரீதாழைபுரீஸ்வரா் கோயிலிலும், தகரப்புதூா், தெடாவூா் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com