மழை வேண்டி தம்மம்பட்டி, சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
மழை வேண்டி தம்மம்பட்டி, சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

மழை வேண்டி திருவாசகம் முற்றோதல்

தம்மம்பட்டி: மழை வேண்டி, தம்மம்பட்டியில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஊா் பொதுமக்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மழையின்றி கடும் வெயில் நிலவுவதால் விவசாய பயிா்கள் காய்ந்து வருகின்றன. நிலத்தடி நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது. தம்மம்பட்டி ஊா் மக்கள் சாா்பில், மழை வேண்டி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி தம்மம்பட்டி, ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது.

இதில் திருவாசகத்தில் உள்ள 51 பதிகங்களும் பாடப்பட்டன. முற்றோதல் மாலை 4.20 வரை நடைபெற்றது. திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் சமயபுரம், துறையூா், கொண்டயம்பள்ளி, நாகியம்பட்டி, உலிபுரம், கொப்பம்பட்டி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 250 க்கும் மேற்பட்ட சிவனடியாா் பங்கேற்று திருவாசகம் பாடினா். அனைவருக்கும் திருவாசகம் நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com