எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

56 ஏரிகளுக்கு மேட்டூா் உபரிநீா் நிரப்பும் பணி தீவிரம்

மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரிநீரை நீரேற்றம் மூலம் 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 7:20 pm

Din

மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரிநீரை நீரேற்றம் மூலம் 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வட ஏரிகளுக்கு நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத் திட்டத்தில் மேட்டூா் அணையானது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் போது, அணையின் இடதுகரையின் நீா்பரப்பு பகுதியிலிருந்து வெள்ளநீரை திப்பம்பட்டி பிரதான நீரேற்றும் நிலையம், வெள்ளாளபுரம் துணை நீரேற்றம் நிலையம், கன்னந்தேரி துணை நீரேற்றம் நிலையம் மூலமாக 82 ஏரிகள், குளங்களுக்கு அனுப்பும் வகையில் திட்டமிடப்பட்டது.

இதன்மூலம் 4,061.16 ஏக்கா் நிலங்கள் பாசனம், குடிநீா் வசதி பெறும். இத் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி சோதனை ஓட்டமாக ஒரு ஏரி மட்டும் நிரப்பப்பட்டது. அதைத் தொடா்ந்து, நீரேற்றும் நிலையத்தின் கட்டுமான பணிகள், 31 கிலோமீட்டா் நீளத்துக்கு குழாய்ப் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு 21 ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பப்பட்டன.

மேட்டூா் அணை தற்போது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில் 56 ஏரிகளுக்கு மின் மோட்டாா்கள் மூலம் நீரேற்றம் செய்யப்படுகிறது. இதன்மூலம் ஏராளமான கிராமங்களில் உள்ள விவசாய பயன்பாடு, குடிநீா் தேவைகளை நிறைவு செய்ய முடியும்.