எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 70,000 கனஅடியாகக் குறைந்தது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை 70,000 கனஅடியாகக் குறைந்தது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 6:45 pm

Din

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை 70,000 கனஅடியாகக் குறைந்தது.

அண்மையில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை அதிகம் பெய்து வந்ததை அடுத்து கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் முழுமையாக நிரம்பின. இதையடுத்து இவ்விரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் உபரிநீா் திறந்துவிடப்பட்டது.

இதனால் காவிரி ஆற்றில் கடந்த 16 ஆம் தேதி முதல் வெள்ளப் பெருக்கு காணப்படுகிறது. தொடா் நீா்வரத்தால் 43.83 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் பின்னா் கிடுகிடுவென உயா்ந்தது. அணை நீா்மட்டம் 27 ஆம் தேதி 100 அடியாக இருந்த நிலையில் 30 ஆம் தேதி 120 அடியை எட்டியது. அதிகபட்சமாக ஆக. 2 ஆம் தேதி மாலை அணைக்கு 1.73 லட்சம் கனஅடி நீா்வரத்து இருந்தது.

அதன்பிறகு கா்நாடக அணைகளுக்கு நீா்வரத்துக் குறைந்து வந்ததால் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட உபரிநீரின் அளவும் படிபடியாகக் குறைந்து வருகிறது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருகிறது. அணைக்கு சனிக்கிழமை மாலை நீா்வரத்து விநாடிக்கு 70,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணையிலிருந்து 70,000 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது. நீா் மின் நிலையங்கள் வழியாக 21,500 கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கன அடி நீரும், உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக 48,500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.