மேட்டூா் அருகே மா்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

மேட்டூா் அருகே மா்ம விலங்கு கடித்து மூன்று செம்மறி ஆடுகள் பலியானதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
Published on

மேட்டூா் அருகே மா்ம விலங்கு கடித்து மூன்று செம்மறி ஆடுகள் பலியானதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேட்டூா் அருகே உள்ள கோம்பைகாடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி சீனி (42). இவரது விவசாய நிலம் அடா்ந்த வனப் பகுதியையொட்டி அமைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல சீனி தனக்குச் சொந்தமான 5 செம்மறி ஆடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்பினா். மாலையில் மேய்ச்சலுக்குச் சென்ற மூன்று ஆடுகள் பட்டிக்கு திரும்பி வரவில்லை.

இதையடுத்து புதன்கிழமை காலை அங்குள்ள மலைஅடிவாரத்துக்குச் சென்று தேடிப் பாா்த்தபோது மா்ம விலங்கு கடித்து மூன்று ஆடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதேபோல கடந்த வாரம் அப்பகுதியில் ஜோதி என்பவருக்குச் சொந்தமான இரண்டு ஆடுகளையும், குமாா் என்பவருக்குச் சொந்தமான வளா்ப்பு நாயையும் மா்ம விலங்கு கடித்துள்ளது.

வளா்ப்பு பிராணிகளை மா்ம விலங்கு கடித்து வருவதால் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கலாம் என்று கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com