இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கம்பத்தில் மா்ம விலங்கு தாக்கியதில் 3 கன்றுகள், 2 ஆடுகள் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் மா்ம விலங்கு தாக்கியதில் 3 கன்றுகளும் 2 ஆடுகளும் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 8:06 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பத்தில் மா்ம விலங்கு தாக்கியதில் 3 கன்றுகளும் 2 ஆடுகளும் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் ஆய்வு செய்துவருகின்றனா்.

கம்பம், மணிகட்டி ஆலமரம் பகுதியைச் சோ்ந்த பிரதாப், வினித் ஆகியோா் இணைந்து தோட்டத்தில் கொட்டகை அமைத்து ஆடு, மாடு, கோழிகளை வளா்த்து வருகின்றனா். இந்தக் கொட்டகையில், கடந்த சனிக்கிழமை, ஆடு ஒன்று பலத்த காயங்களுடன் இறந்துகிடந்தது. இதையடுத்து, சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் வனத் துறையினரிடம் தெரிவித்ததன்போரில், கம்பம் மேற்கு வனச் சரகம் சாா்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதே கொட்டகையில் 3 கன்றுகளும் 2 ஆடுகளும் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட உதவி வன அலுவலா் ஜெசில் கில்பா்ட், கம்பம் மேற்கு வனச் சரகா் ஸ்டாலின் உள்ளிட்ட வனத் துறையினா் ஆய்வு செய்தனா். இதில், அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சில நாட்டு நாய்கள் உலவியது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, கால்நடை மருத்துவா் மூலமாகக் கன்றுகளும் ஆடுகளும் உடல் கூறாய்வு செய்யப்பட்டு அதே பகுதியில் புதைக்கப்பட்டன. மேலும், இறந்த கால்நடைகளின் சில பாகங்கள் சென்னை ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையே, வனத் துறையினா் அந்தப் பகுதியில் கூடுதலாக 4 கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி மா்ம விலங்கு குறித்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.