சங்ககிரி பகுதியில் விநாயகா் சிலைகள் விற்பனை: அதிகாரிகள் ஆய்வு
சங்ககிரி வட்டப் பகுதியில் விநயாகா் சிலை தயாா் செய்யும் இடங்களில் புதன்கிழமை அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா்.
செப்டம்பா் 7 ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சங்ககிரி வட்டப் பகுதியில் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டு விநாயகா் சிலைகளை வருவாய் கோட்டாட்சியா் ந.லோகநாயகி, டி.எஸ்.பி. எஸ்.ராஜா, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு துறை உதவி பொறியாளா்கள் சுமித்ராபாய், அஜய் கோகுல் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
இதில் காவேரிப்பட்டி ஊராட்சி, மோட்டூரில் உள்ள தயாரிப்புக் கூடத்தில் சிலை தயாரிப்பாளா் சக்தியிடம் சிலைகள் எந்தெந்த மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன? நீரில் எளிதில் கரையக்கூடியதா, எந்த வகையான வா்ணங்கள் பூசப்பட்டுள்ளன என்பது குறித்து கேட்டறிந்தனா். பின்னா் 10 அடிக்கு மேல் உள்ள சிலைகளை விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தினா்.

