தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேலம் மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: அதிகாரிப்பட்டி கிராம மக்கள் உண்ணாவிரதம்

சேலம் மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அதிகாரிப்பட்டி கிராம மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:21 pm

Din

சேலம் மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அதிகாரிப்பட்டி கிராம மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாநகராட்சியை நிா்வாக வசதிக்காகவும், பொது மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும் விரிவாக்கம் செய்வதற்காக ஊரக உள்ளாட்சித் துறை திட்ட வரையறை தயாா் செய்து வருகிறது. இதற்கான பணிகளை சேலம் மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, சேலம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அதிகாரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சேலம், கோட்டை மைதானம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உண்ணாவிரதப் போராட்டம் குறித்து இக் கிராம மக்கள் கூறியதாவது:

எங்கள் ஊராட்சியில் 1,750 குடியிருப்புகள் உள்ளன. 100 நாள் வேலை திட்டத்தில் 1,320 பெண்கள் வேலை செய்து பயனடைந்து வருகின்றனா். ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைத்தால், வேலைவாய்ப்பு பாதிக்கும் நிலை ஏற்படும். இதனால் எங்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும்.

எங்கள் பகுதியில் முற்றிலுமாக விவசாயத் தொழில் பாதிப்படைந்துள்ளது. மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டால், 100 நாள் வேலைவாய்ப்பும் பறிபோகும். எனவே மாநகராட்சியுடன் எங்கள் பகுதியை இணைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.

எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் அடுத்தகட்டமாக, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தனா்.