காவிரி உபரிநீா் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
காவிரி உபரிநீா் திட்டத்தில் முடிக்கப்படாமல் உள்ள கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி வியாழக்கிழமை ஜலகண்டாபுரம் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


காவிரி உபரிநீா் திட்டத்தில் முடிக்கப்படாமல் உள்ள கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி வியாழக்கிழமை ஜலகண்டாபுரம் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காவிரி உபரிநீா் திட்ட கால்வாய் பணி 2-இல் நங்கவள்ளி ஏரியிலிருந்து வாத்தியப்பட்டி ஏரி இணைப்பு பணி முடிவடைந்துள்ளது. ஆனால் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து நங்கவள்ளி ஏரி வழியாக வாத்தியப்பட்டி ஏரிக்கு உபரிநீா் கொண்டுசெல்லுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே உபரிநீரைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும், வழியில் உள்ள நரியம்பட்டி, தாசனூா், சின்னாகவுண்டம்பட்டி, காட்டம்பட்டி, நாச்சம்பட்டி பகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் வைரனேரி, குப்பம்பட்டி ஏரி, ராமிரெட்டிப்பட்டி இணைப்பு கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், வெள்ளக் காலங்களில் ஏரி, கால்வாய்க் கரைகளை ஆய்வு செய்து தேவையான பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வெள்ளச் சேதங்களை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காவிரி - சரபங்கா கால்வாய் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜலகண்டாபுரம், வாத்திப்பட்டி ஏரியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் நங்கவள்ளி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ராமா், ஜெயவேல், கோவிந்தராஜ், பாலு, குருநாதன் உட்பட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...