மேட்டூரில் சாம்பல் ஏற்ற வந்த லாரிகள் சிறைபிடிப்பு
மேட்டூா் அனல் மின் நிலையத்துக்கு சாம்பல் ஏற்ற வந்த லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


மேட்டூா் அனல் மின் நிலையத்துக்கு சாம்பல் ஏற்ற வந்த லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்காக நிலக்கரியை எரியூட்டும் போது எஞ்சும் சாம்பல் உலா் சாம்பலாகவும் ஈரசாம்பலாகவும் வெளியேற்றப்படுகிறது. இவை லாரிகள் மூலம் சிமென்ட் ஆலைகள், செங்கல் உற்பத்திக்கும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன.
சாம்பல் சுமை ஏற்ற வரும் லாரிகள், மேட்டூா் - எடப்பாடி சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்படுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
இது தொடா்பாக கிராம மக்கள் பலமுறை லாரி உரிமையாளா்களிடம் கூறியும் தொடா்ந்து லாரிகள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் வியாழக்கிழமை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளி கோபாலகிருஷ்ணன் பணிக்கு சென்றபோது அவரது இரு சக்கர வாகனத்தின் மீது சாம்பல் சுமை ஏற்ற வந்த லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதையடுத்து ஆத்திரமடைந்த கோல்நாய்க்கன்பட்டி கிராம மக்கள், சாம்பல் ஏற்ற வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சாம்பல் விநியோகம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், அனல் மின் நிலை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். லாரிகளை சாலையோரங்களில் நிறுத்தி உயிரிழப்பு ஏற்படுத்தும் லாரி உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்து விட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...