சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

1.3.1976: நெய்வேலியில் புதிய அனல் மின் நிலையம் ஏற்படுமா?

நெய்வேலி அனல் மின் நிலையம் பற்றி...

News image
1.3.1976
Updated On :28 பிப்ரவரி 2026, 10:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கர் நூல், பிப், 29 - ஆந்திராவிலுள்ள கொத்தக் கூடத்திலோ, அல்லது நெய்வேலியிலோ பெரிய அனல் மின்சார நிலையம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு நிதியுதவி அளிக்க உலக பாங்கு ஒப்புக் கொண்டிருப்பதாக ஆந்திர மின் வரியத் தலைவர் தாத்தாராவ் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஸ்ரீசைலத்திலும், நாகார்ஜுன் சாகரிலும் ஜல மின்சார நிலையங்கள் அமைக்க நிதிுதவி யளிக்க சவூதி அரேபியா ஒப்புக் கொண்டிருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

சென்னை, பிப். 28 - தமிழ்நாடு காங்கிரசின் புதிய காரியக் கமிட்டியை காங்கிரஸ் தலைவர் ஜி. கருப்பையா மூப்பனார் இன்று அறிவித்தார்.

புதிய காரியக் கமிட்டி நியமனம் சம்பந்தமாக அ.இ.கா கமிட்டி தலைவர் பருவாவுடனும் மற்றவர்களுடனும் புது டில்லியில் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு நேற்றிரவு சென்னை திரும்பிய மூப்பனார் இன்று வெளியிட்ட புதிய காரியக் கமிட்டியில் 45 பேர் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் தொழிலமைச்சர் ஆர். வெங்கட்ராமன் உட்பட 10 பேர் விசேஷ அழைப்பாளர்களாக இருக்கின்றனர்.

பி. மகாதேவன் பிள்ளை, கே எஸ். இராமசாமி ஆகிய இருவரே தமிழ்நாடு காங்கிரசின் உப தலைவர்களாக இருந்தனர். இவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் பி. கக்கன், ஈ.வி.கி. சம்பத் ஆகிய இருவரும் உப தலைவர்களாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கருப்பையா மூப்பனார் அறிவித்தார். கே. ராஜாராம் நாயுடு பொக்கிஷதாரராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, பிப். 28-"தற்போது மாவட்டங்களுக்கிடையே உள்ள நெல், அரிசி நடமாட்டக் கட்டுப்பாட்டை அறவே ரத்து செய்துவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஆகவே மாவட்டங்களுக்கிடையே தனியார் வியாபாரிகள் நெல் அல்லது அரிசி எடுத்துச் செல்வதற்கு அறவே அனுமதிக்கப்படமாட்டார்கள்" என்று தமிழக கவர்னர் கே.கே. ஷா இன்று தெரிவித்தார்.

ஒரு மாவட்டத்தின் உபரி விளைச்சல் பகுதியிலிருந்து பற்றாக்குறை பகுதிக்கு விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நெல், அரிசி நடமாட்டத்தை அந்த மாவட்டத்தின் எல்லைக்குள்ளேயே கூட்டுறவுத் துறையின் மூலம் அல்லது அரசாங்கத்தின் மூலம் (மாநில உணவுக் கார்ப்பரேஷன் மூலம்) மட்டுமே அனுமதிப்பது குறித்து யோசிக்கிறோம்' என்று கவர்னர் விளக்கினார்.

"சென்னை நகரைப் பொறுத்தவரையில் உபரி விளைச்சல் மாவட்டமான தஞ்சை மாவட்டத்திலிருந்து சென்னை நகருக்கு அரசாங்க கணக்கிலோ அல்லது கூட்டுறவுத் துறை மூலமோ தாராளமாக அரிசி கொண்டு வர அனுமதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்று ஷா சொன்னார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.