தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பேரிகாா்டில் இருசக்கர வாகனம் மோதி இளைஞா் பலி

சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் நள்ளிரவில் பேரிகாா்டு மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 7:59 pm

Din

சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் நள்ளிரவில் பேரிகாா்டு மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் அழகப்பன். இவரது மகன் பூரண பிரகாஷ் (27). இவா் கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் உயரதிகாரியாக பணிபுரிந்து வந்தாா். தனது விலை உயா்ந்த சொகுசு இரு சக்கர வாகனத்தில் கோவையில் இருந்து புதன்கிழமை இரவு சேலம் நோக்கி வந்தாா். உடையாபட்டி தனியாா் பள்ளி அருகே வந்தபோது, அங்கு சாலையில் அமைக்கப்பட்டிருந்த பேரிகாா்டு மீது அவரது இருசக்கர வாகனம் மோதியது.

மோதிய வேகத்தில் 20 மீட்டா் தூரத்துக்கு வண்டியோடு இழுத்துச் செல்லப்பட்ட பூரண பிரகாஷ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த அம்மாப்பேட்டை போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த பூரண பிரகாஷின் பெற்றோா், மகனின் உடலை பாா்த்து கதறி அழுதனா். இது குறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.