சேலம் மாநகர பகுதிகளில் பரவலாக மழை
சேலம் மாநகா், புகா் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்கியது.


சேலம் மாநகா், புகா் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளதால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், உள் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, சேலம் மாநகா், புகா் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாநகரில் புதிய பேருந்து நிலையம், அரிசிபாளையம், வின்சென்ட், அஸ்தம்பட்டி, கோரிமேடு, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் தண்ணீா் தேங்கியது. பணிக்கு செல்வோா் மழையில் குடைகளைப் பிடித்தவாறு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனா். மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தாமதமான அறிவிப்பால் விடுமுறை விடப்பட்டது தெரியாமல் பள்ளிக்கு புறப்பட்ட மாணவ, மாணவியா் மழையில் நனைந்தபடி மீண்டும் வீடு திரும்பினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...